முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நெகிழி இல்லா தமிழகம் படைக்க திருச்சியில் ஒன்றுகூடிய சமூக ஆர்வலர்கள்

மனிதன் கண்டுபிடித்த பொருட்களில் இந்த பூமிக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் பொருட்களில் ஒன்று நெகிழி இயந்திர வாழ்க்கையில் சுலபமாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி கொண்டதன் காரணமாக இன்று ஒரு முறை உபயோகப்படுத்தும் நெகிழி பயன்பாடு பெருகி நம் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரம் எல்லாமே கேள்விகுறியாகி இருக்கின்றன இந்த நிலை நீடித்தால் நம் அடுத்த தலைமுறை பிள்ளைகள் இந்த மண்ணில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும் எனவே நாம் முடிந்தவரை இந்த நெகிழி பயன்பாட்டை குறைக்கும் முயற்சியில் இறங்க வேண்டும் அதற்கான ஒரு தொடக்கம் தான்  இந்த நெகிழி இல்லா தமிழகம் விழிப்புணர்வு மாநாடு இந்த மாநாடு திருச்சி தேசிய கல்லூரியில் ஜுலை 14 2019 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது இந்த நிகழ்வில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வரும் தன்னார்வ அமைப்புகள்,  தன்னார்வலர்கள் மற்றும் பல்வேறு பள்ளி கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர் அவற்றில் புதிய பயணம் , சேலம் இளைஞர்கள் குழு , பணை காக்கும் நண்பர்கள் திருப்பூர் , நெகிழி இல்லா திருப்பூர் , கிரா