முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

தமிழக நீர் ஆர்வலர்கள் செயல் திட்ட பயிற்சி முகாம் | புகைப்பட தொகுப்பு

தமிழக நீர் ஆர்வலர்கள் செயல் திட்ட பயிற்சி முகாம் | 22/02/2020 | புகைப்பட தொகுப்பு. இடம் : இராமகிருஷ்ண தபோவனம் , திருப்பராய்த்துறை , திருச்சிராப்பள்ளி
சமீபத்திய இடுகைகள்

தேனி மாவட்டத்தில் நடந்து வரும் ஆணி பிடுங்கும் திருவிழா

15 கும் மேற்பட்ட கிராமத்தில் கடந்த கிராம சபை கூட்டத்தின் போது மரத்தில் ஆணி அடிக்க கூடாது என தீர்மானம் போடப்பட்ட நிலையில் ஏற்கனவே அடித்த ஆணிகளை தற்போது பிடுங்கி வருகின்றனர். ஆணி பிடுங்கும் திருவிழா என்ற பெயரில் கடந்த ஒரு மாத காலமாக சாலையின் ஓரத்தில் உள்ள மரங்களில் அடிக்கப்பட்டுள்ள ஆணிகளை பிடுங்கி வருகின்றனர்.

பெற்றோர்களே இவர் சொல்வதை கேளுங்கள்

பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கரூர் கிடாத்தான் நிகழ்வில் கரூர் நகர துணை காவல் ஆய்வாளர் திரு சே.கார்த்திக் அவர்களின் பேச்சு.

வள்ளி கும்மியாட்டம் | பொள்ளாச்சி | Valli kummi

பொள்ளாச்சி வேட்டைக்காரன் புதூரை சேர்ந்த கிராமிய கலைஞர்களின் வள்ளி கும்மியாட்டம் நிகழ்வானது புதியதலைமுறை தொலைக்காட்சியின் நம்மால் முடியும் குழுவினரின் ஒருங்கிணைப்பில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு பசுமை சார்ந்த குழுக்கள்  பங்கேற்ற பொள்ளாச்சி பசுமை பொங்கல் விழாவில் அரங்கேறியது.. பொள்ளாச்சி வேட்டைக்காரன் புதூரை சேர்ந்த திரு பாலசுப்பிரமணியன் அவர்களுடைய குழுவினர் இவ்வாட்டத்தை நிகழ்த்தி காட்டினர்.. தமிழக பாரம்பரிய ஆட்டங்களுள் ஒன்றான இவ்வாட்டம் தற்போது அழிந்து வரும் நிலையில் உள்ளது எனவே இவற்றை காக்கும் முயற்சியில் இக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். நாமும் நம் பாரம்பரிய கலைகளை காக்கும் விதமாக திருவிழா போன்ற அனைத்து நிகழ்வுகளின்போதும் இது போன்ற கலைகள் நடைபெற முயற்சி செய்வோம். நன்றி : புதியதலைமுறை தொலைக்காட்சி - நம்மால் முடியும் குழு

அரசு பள்ளியில் நடந்த பசுமை குடியரசு தின விழா

பேளுக்குறிச்சி இராவணன் குழுவினரின் சிலம்பாட்டம்

தமிழர்களின் சிறந்த தற்காப்பு கலையும் வீர விளையாட்டுமான சிலம்பாட்டமானது நாமக்கல் பேளுக்குறிச்சியை சேர்ந்த இராவணன் சிலம்ப குழுவினரால் புதியதலைமுறை தொலைக்காட்சி நம்மால் முடியும் குழுவினரின் ஒருங்கிணைப்பில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு பசுமை சார்ந்து இயங்கும் குழுக்கள் பங்கேற்ற பொள்ளாச்சி பசுமை பொங்கல் விழாவில் நடைபெற்றது. நன்றி : புதியதலைமுறை தொலைக்காட்சி - நம்மால் முடியும் குழு , டார்கெட் ஜீரோ

20 வருடங்களுக்கு பிறகு நிரம்பிய கரூர் ஆத்துப்பாளையம் அணையில் சாயப்பட்டறை கழிவுநீர் | துர்நாற்றம் வீசும் அவலம்

    உலகில் கிடைக்கும் மிகவும் சுவையான குடிநீரில் ஒன்று தான் சிறுவாணி நீர் , அப்படிப்பட்ட சுவையான நீர் கரூர் மாவட்டம் வரைக்கும் வந்தாலும் நாம் அந்த சுவையை சுவைக்க முடியாது. காரணம் என்ன ? பார்ப்போம்   மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுவாணி மலைப்பகுதியில் பல்வேறு சிறு ஓடைகள் இணைந்து ஆறாக பெருக்கெடுத்து ஓடி வருகிறது , இந்த ஆற்றின் பெயர் பெரியாறு என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த ஆற்றுடன் வெள்ளியங்கிரி மலையில் இருந்து உருவாகும் மத்திமர கண்டி ஓடையும் பின்பு சின்னாறு , தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி என்ற ஆறும் ஒன்று சேர்ந்தவுடன் இவை நொய்யல் என பெயர் பெருகிறது.   பின்பு கோவை , திருப்பூர் , காங்கேயம் வழியாக கரூர் மாவட்டம் நொய்யல் என்ற கிராமத்தில் காவிரியுடன் கலக்கிறது.   ஒரு காலத்தில் கொங்கு மண்டலத்தின் அடையாளமாகவும் , விவசாயம் வளமாக அமைய காரணமாகவும் இருந்த நொய்யல் ஆறு தற்போது விவசாய நிலங்களை பாழ்படுத்தியும் , நிலத்தடி நீர்மட்டத்தை கெடுத்தும் வருகிறது அதற்கு முக்கிய காரணம் திருப்பூர் பகுதியில் இருந்து நேரடியாக ஆற்றில் கலக்கும் சாயப்பட்டறை கழிவுகள்.   இந்த நொய்யல் ஆற்றின் குறுக்கே கடந்த