முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பற்றி எறியும் உலகின் நுரையீரல்.. பாதுகாக்க வலியுறுத்தும் தமிழர்கள்

உலகில் எங்கு அநீதி நேர்ந்தாலும் முதலில் அதனை எதிர்த்து குரல் கொடுப்பது தமிழினமாக தான் இருக்கும் அந்த வகையில் இன்று உலகிற்கே பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு நிகழ்வு நடந்து வருகிறது அதுதான் அமேசான் மழைக்காடுகள் அழிப்பு.. பூமியில் உற்பத்தியாகும் மொத்த ஆக்ஸிஜன் அளவில் 20 விழுக்காடு அளவு அமேசான் காடுகளில் இருந்து தான் உற்பத்தி ஆகிறது எனவே தான் அதனை உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படுகிறது கடந்த மூன்று வார காலமாக இந்த நுரையீரல் தீ பற்றி எறிந்து கொண்டு உள்ளது.. பல அரியவகை உயிரினங்கள் , தாவரங்கள் எல்லாம் அழிந்து கொண்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 9500 காட்டு தீ சம்பவங்கள் நடைபெற்றுள்ளது மேலும் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 80 விழுக்காடு அளவு அதிகமான காடுகள் அழிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஜுலை மாதம் மட்டும் சுமார் 1345 ச.கி.மீ அளவுக்கு மரங்கள் வெட்டப்பட்டு உள்ளது , இதன் அளவை ஒப்பிட்டு பார்த்தால் டோக்கியோ நகரை விட இரண்டு மடங்கு பெரியது. இதன் ஆபத்தை உணர்ந்த மக்கள் அனைவரும் உடனடியாக தீயை அனைக்க வேண்டும் என்றும் அமேசான் காடுகளை பாதுகாக்க வேண்டும் என்றும் உலகம் முழுவதும்