முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

20 வருடங்களுக்கு பிறகு நிரம்பிய கரூர் ஆத்துப்பாளையம் அணையில் சாயப்பட்டறை கழிவுநீர் | துர்நாற்றம் வீசும் அவலம்

ஆத்துப்பாளையம் அணை , கரூர் , கார்வழி கிராமம் , க.பரமத்தி ஒன்றியம் , Aathupalayam dam

    உலகில் கிடைக்கும் மிகவும் சுவையான குடிநீரில் ஒன்று தான் சிறுவாணி நீர் , அப்படிப்பட்ட சுவையான நீர் கரூர் மாவட்டம் வரைக்கும் வந்தாலும் நாம் அந்த சுவையை சுவைக்க முடியாது. காரணம் என்ன ? பார்ப்போம்

  மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுவாணி மலைப்பகுதியில் பல்வேறு சிறு ஓடைகள் இணைந்து ஆறாக பெருக்கெடுத்து ஓடி வருகிறது , இந்த ஆற்றின் பெயர் பெரியாறு என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த ஆற்றுடன் வெள்ளியங்கிரி மலையில் இருந்து உருவாகும் மத்திமர கண்டி ஓடையும் பின்பு சின்னாறு , தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி என்ற ஆறும் ஒன்று சேர்ந்தவுடன் இவை நொய்யல் என பெயர் பெருகிறது.

  பின்பு கோவை , திருப்பூர் , காங்கேயம் வழியாக கரூர் மாவட்டம் நொய்யல் என்ற கிராமத்தில் காவிரியுடன் கலக்கிறது.
Aathupalayam dam , karur

  ஒரு காலத்தில் கொங்கு மண்டலத்தின் அடையாளமாகவும் , விவசாயம் வளமாக அமைய காரணமாகவும் இருந்த நொய்யல் ஆறு தற்போது விவசாய நிலங்களை பாழ்படுத்தியும் , நிலத்தடி நீர்மட்டத்தை கெடுத்தும் வருகிறது அதற்கு முக்கிய காரணம் திருப்பூர் பகுதியில் இருந்து நேரடியாக ஆற்றில் கலக்கும் சாயப்பட்டறை கழிவுகள்.

  இந்த நொய்யல் ஆற்றின் குறுக்கே கடந்த 1980 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 19500 ஏக்கர் விளைநிலங்கள் பயன்படக்கூடிய சுமார் 235 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்கும் திறனுடன் 1991 ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது கரூர் மாவட்டம் , க.பரமத்தி ஒன்றியம் , கார்வழி கிராமத்தில் அமைந்திருக்கும் ஆத்துப்பாளையம் அணை.

  ஆனால் இதன் பயன் நீண்ட வருடங்களுக்கு நிலைக்கவில்லை  காரணம் திருப்பூர் சாயப்பட்டறை கழிவுகள் தண்ணீரில் கலந்ததினால் அணையில் தேக்கி வைத்து பாசனத்திற்கு பயன்படுத்தும் போது பாசன வசதி பெரும் நூற்றுக்கணக்கான விளைநிலங்கள் பாழ்ப்பட்டன. அதனால் கடந்த 1999 ஆம் ஆண்டு விவசாய சங்கத் தலைவர் திரு ஜெகநாதன் என்பவர் இந்த அணையில் தண்ணீரை தேக்கி வைக்க உயர்நீதிமன்றத்தில் தடை வாங்கினார். அதன் பின்பு அணையும் நிரம்பவில்லை விவசாயத்திற்கும் தண்ணீர் திறக்கப்படவில்லை.

  தற்போது 20 வருடங்கள் கழித்து கோவை, திருப்பூர் பகுதியில் பெய்த அதிகப்படியான மழையின் காரணமாக அணையானது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

 இந்நிலையில் விவசாயிகள் தண்ணீரின் தன்மையை ஆராய்ந்து பாசனத்திற்கு திறந்துவிட வேண்டும் என அரசிற்கு கோரிக்கை வைத்தனர். அதன் காரணமாக வழக்கு தொடர்ந்தவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வழக்கு வாபஸ் பெறப்பட்டு நவம்பர் 10 ம் தேதி கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு அன்பழகன் அவர்களின் தலைமையில் போக்குவரத்து துறை அமைச்சர் திரு எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் கலந்துகொண்டு பாசனத்திற்காக அணையை திறந்து வைத்தார்.

  ஆனால் நவம்பர் 11 ம் தேதி நாங்கள் அந்த அணையை பார்வையிட செல்லும்போது அணையின் பக்கமே செல்ல முடியாத அளவிற்கு ஒரு துர்நாற்றம் வீசியது , 20 வருடங்கள் கழித்து நிரம்பிய அணை என்பதால் அணையை பார்வையிட பலரும் வந்தனர் ஆனால் சில நிமிடங்கள் கூட தண்ணீர் வெளியேறும் இடத்தின் அருகில் நிற்க முடியாமல் மூக்கை மூடிக்கொண்டு சென்றதை நம்மால் பார்க்க முடிந்தது.

  கடந்த 20 வருடங்களுக்கு மேலாக சாயப்பட்டறைகளுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் மேலும் சாயப்பட்டறைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திடம் உத்தரவும் பெற்றுள்ளனர் . ஆற்று நீரை மாசுபடுத்தும் ஆலைகளுக்கு எதிராக கடும் நிலைப்பாட்டை எடுத்துள்ள உச்சநீதிமன்றம் , சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டுமே ஆற்றில் கலக்க வேண்டும் என்றும் சுத்திகரிப்பு வசதி இல்லாத ஆலைகளுக்கு உரிமம் பறிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

  போராட்டங்கள் , நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரும் சாயப்பட்டறைகள் சாயக்கழிவுகளை ஆற்றில் கலந்துகொண்டுதான் இருக்கின்றன.

  உலகில் இரண்டாவது சுவையான குடிநீர் என சிறுவாணி நீர் புகழப்பட்டாலும் அது இன்றைய கேரளத்தில் மட்டுமே உள்ளது. அதே பகுதியில் உருவாகி தமிழகத்தில் ஓடும் நொய்யலை சுற்றுச்சூழல் விழிப்புணர்வின்றி சாக்கடை , இரசாயனக் கழிவுகளை கலந்து மாசுபடச் செய்து பயனற்ற செத்த ஆறாக மாற்றியுள்ளனர் தமிழர்கள்.

  நூற்றாண்டுகளாக அண்டை மாநிலங்களோடு தண்ணீருக்காக பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில் இருக்கும் நீராதாரங்களை முறைப்படுத்த வேண்டும் , நகரப் பகுதிகளில் சாக்கடை ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும் , ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் , ஆலைகளில் இருந்து நேரடியாக கலக்கும் இரசாயனக் கழிவுகளை தடுக்க வேண்டும் என்பதுவே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

கருத்துகள்

  1. கழிவுநீர் கண்டிப்பாக நொய்யல் ஆற்றின் விடக்கூடாது பத்து புளே மீட்டர் மாட்டி இருக்கிறார்கள் சாயப்பட்டறை கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலக்குற என்பதை கண்காணிக்க அந்த கிலோமீட்டர் ஆன்லைன் மூலமாக சென்னையிலுள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க முடியும் அதுவல்லாமல் 4 அதிரடிப்படை அதிரடிப்படை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் திருப்பூர் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் இருந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் இதையும் மீறி சாயப்பட்டறை தண்ணீர் நொய்யல் ஆற்றில் கலந்தால் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உயர் அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு தொடர்ந்து அவர்களை சிறையில் அடைக்க விவசாயிகளுக்கு உரிமை இருக்கிறது இதை விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டும்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழக நீர் ஆர்வலர்கள் செயல் திட்ட பயிற்சி முகாம் | புகைப்பட தொகுப்பு

தமிழக நீர் ஆர்வலர்கள் செயல் திட்ட பயிற்சி முகாம் | 22/02/2020 | புகைப்பட தொகுப்பு. இடம் : இராமகிருஷ்ண தபோவனம் , திருப்பராய்த்துறை , திருச்சிராப்பள்ளி

5 மரக்கன்றுகள் நட்டால், ஒரே நாளில் பட்டா! - அசத்தும் கரூர் மண்டல துணை வட்டாட்சியர்

கரூரில் மண்டல துணை வட்டாட்சியர் ஒருவர், தனது இருக்கைக்குப் பின்னே, 'என் கையொப்பம் விலைமதிக்க முடியாதது விலை பேசாதீர் '  என்று எழுதி வைத்துள்ளது, பலரது பாராட்டைப் பெற்றிருக்கிறது. `எந்தச் சூழலிலும் லஞ்சத்தை விரும்பமாட்டேன்' என்று நேர்மை மாறாமல் பணியாற்றும் அரசு அலுவலர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி ஓர் அரசு அலுவலர்தான், மோகன்ராஜ். கரூர் மண்டல துணை தாசில்தாராக இருக்கும் இவர், தனது அறை முழுக்க, `என் கையொப்பம் விலைமதிக்க முடியாதது. விலை பேசாதீர். கையூட்டு கொடுப்பதும், கொள்வதும் குற்றமாகும். மண்டல துணை வட்டாட்சியர், கரூர்' என்று எழுதிவைத்து அசத்துகிறார். அதோடு, `பட்டா மாறுதல் கோரும் புல எண்ணில் புதிதாக '5' மரக்கன்றுகள் நட்டு அதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தால், விண்ணப்பம் முதுநிலை வரிசையின்படி அல்லாமல் முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக பரிசீலனை செய்யப்படும்' என்றும் எழுதி வைத்து அசரடிக்கிறார். நான் பணிஓய்வு அடையும்வரை மரக்கன்று வளர்க்க நான் செய்யும் முயற்சியையும், நான் செய்யும் பணியில் கட்டிக்காக்கும் நேர்மையையும் விடாமல் தொடருவேன். இதேபோல்