முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நெகிழி இல்லா தமிழகம் படைக்க திருச்சியில் ஒன்றுகூடிய சமூக ஆர்வலர்கள்

Plastic tamilnadu Banplastic

மனிதன் கண்டுபிடித்த பொருட்களில் இந்த பூமிக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் பொருட்களில் ஒன்று நெகிழி

இயந்திர வாழ்க்கையில் சுலபமாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி கொண்டதன் காரணமாக இன்று ஒரு முறை உபயோகப்படுத்தும் நெகிழி பயன்பாடு பெருகி நம் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரம் எல்லாமே கேள்விகுறியாகி இருக்கின்றன

இந்த நிலை நீடித்தால் நம் அடுத்த தலைமுறை பிள்ளைகள் இந்த மண்ணில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும் எனவே நாம் முடிந்தவரை இந்த நெகிழி பயன்பாட்டை குறைக்கும் முயற்சியில் இறங்க வேண்டும் அதற்கான ஒரு தொடக்கம் தான்  இந்த நெகிழி இல்லா தமிழகம் விழிப்புணர்வு மாநாடு

Plastic tamilnadu 2019

இந்த மாநாடு திருச்சி தேசிய கல்லூரியில் ஜுலை 14 2019 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது

இந்த நிகழ்வில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வரும் தன்னார்வ அமைப்புகள்,  தன்னார்வலர்கள் மற்றும் பல்வேறு பள்ளி கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர்






அவற்றில் புதிய பயணம் , சேலம் இளைஞர்கள் குழு , பணை காக்கும் நண்பர்கள் திருப்பூர் , நெகிழி இல்லா திருப்பூர் , கிராமிய மக்கள் இயக்கம் , பசுமை கரூர் , பசுமை சங்ககிரி , பசுமை இந்தியா , டார்கெட் ஜீரோ நிறுவனர் பாலகுமாரன் மற்றும் மரம் பழனிச்சாமி , பசுமை ஹாஜி போன்ற ஏராளமானோர் பங்குபெற்றனர்



நிகழ்வில் இயற்கை பொருட்களின் கண்காட்சி நடைபெற்றது அதில் மரங்களினால் ஆன விளையாட்டு பொருட்கள், பொம்மைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் , இயற்கை மருத்துவ பொருட்கள் , வீட்டிலேயே இயற்கை உரம் தயாரிக்கும் முறை , இயற்கை நாப்கின் , எளிதில் மண்ணில் மற்றும் நீரில் மட்கும் தன்மை கொண்ட நெகிழி இல்லா பைகள் , இயற்கை உரங்கள் , இயற்கை உணவுப்பொருட்கள் , பாரம்பரிய விதைகள் , மண்பாண்ட சமையல் பொருட்கள் , நம்மாழ்வாரின் புத்தகங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது இதனை ஏராளமானோர் கண்டு ரசித்ததுடன் தங்களுக்கு தேவையானதை வாங்கி சென்றனர்


மேலும் நெகிழியினால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்த புகைப்பட கண்காட்சியும் இடம்பெற்றிருந்தது இதனை அனைவரும் புகைப்படம் எடுத்து சென்றனர்

நிகழ்வில் பல சமூக ஆர்வலர்கள் உரையாற்றினார்கள்  , சமூக விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டது மேலும் பாரம்பரிய நடனம் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன

இந்த நிகழ்ச்சியை கிரீன் பேஜஸ் நிறுவனர் சந்தானம் ராமசாமி , சைன் திருச்சி அமைப்பின் நிறுவனர் மனோஜ் தர்மா , புதிய பயணம் அமைப்பு நிறுவனர் இராகவன் சிவராமன் , பெருவை புகழேந்தி , கௌரிஷ் ஜெயபால் , நல்லப்பன் தங்கராஜ் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினார்கள் மேலும் இவர்களுடன் இணைந்து திருச்சி தேசிய கல்லூரி மாணவ மாணவியர்கள் இந்நிகழ்வு வெற்றிகறமாக நடைபெற உதவி புரிந்தனர்

மாநாட்டிற்கு வரும் நபர்களை தனது ஆட்டோ மூலம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து தேசிய கல்லூரி வரை இலவசமாக அழைத்து சென்ற தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் சங்கத்தை சேர்ந்த
திரு சிவா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைத்து சமூக
செயற்பாட்டாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்

பசுமை கரூர் 2019

வாருங்கள் நெகிழி இல்லா மற்றும் பசுமை தமிழகம் படைப்போம்

மாற்றம் நம்மிடமிருந்து💪💪💪

 அன்புடன்
 ஜெகன்
🌱பசுமை கரூர்🌱

கருத்துகள்

  1. நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டேன் நெகிழிப்பைகளின் அபாயகரமான தாக்குதல்களளுக்கான காரணிகள் தெளிவாக விளக்கப் பட்டது இனி ஒவ்வொரு தனி மனிதனும் நெகிழியை தவிர்க்க எல்லாவிதமான முயற்சிகளிலும் ஈடுபட்டு நம் பிறவா தலைமுறைகள் உயிருடனும் நோய்நொடி இன்றியும் நல்ல தூய காற்றகாற்றை பெறவும் நல்ல மழை வளம் சுகாதாரமான குடிநீர் பெறவும் ஒவ்வொருவரும் நெகிழிப்பைகளை தவிர்த்து துணி பை கையிலெடுக்க தீவிர முயற்சி எடுக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. 👌👌👌👌👌👌👏👏👏👏👏👏🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக