முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பற்றி எறியும் உலகின் நுரையீரல்.. பாதுகாக்க வலியுறுத்தும் தமிழர்கள்

Thalattummazhai ,

உலகில் எங்கு அநீதி நேர்ந்தாலும் முதலில் அதனை எதிர்த்து குரல் கொடுப்பது தமிழினமாக தான் இருக்கும் அந்த வகையில் இன்று உலகிற்கே பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு நிகழ்வு நடந்து வருகிறது அதுதான் அமேசான் மழைக்காடுகள் அழிப்பு..

பூமியில் உற்பத்தியாகும் மொத்த ஆக்ஸிஜன் அளவில் 20 விழுக்காடு அளவு அமேசான் காடுகளில் இருந்து தான் உற்பத்தி ஆகிறது எனவே தான் அதனை உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படுகிறது

Thalattummazhai , amazon forest fire

கடந்த மூன்று வார காலமாக இந்த நுரையீரல் தீ பற்றி எறிந்து கொண்டு உள்ளது.. பல அரியவகை உயிரினங்கள் , தாவரங்கள் எல்லாம் அழிந்து கொண்டுள்ளது.
Thalattummazhai ,

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 9500 காட்டு தீ சம்பவங்கள் நடைபெற்றுள்ளது மேலும் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 80 விழுக்காடு அளவு அதிகமான காடுகள் அழிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஜுலை மாதம் மட்டும் சுமார் 1345 ச.கி.மீ அளவுக்கு மரங்கள் வெட்டப்பட்டு உள்ளது , இதன் அளவை ஒப்பிட்டு பார்த்தால் டோக்கியோ நகரை விட இரண்டு மடங்கு பெரியது.

இதன் ஆபத்தை உணர்ந்த மக்கள் அனைவரும் உடனடியாக தீயை அனைக்க வேண்டும் என்றும் அமேசான் காடுகளை பாதுகாக்க வேண்டும் என்றும் உலகம் முழுவதும் இருந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்

அவர்களுக்கு கைகோர்க்கும் விதமாகவும் உலக நாடுகளை வலியுறுத்தும் விதமாகவும் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு சுற்றுச்சூழல் சார்ந்து இயங்கும் அமைப்புகள் கையில் பதாகைகளை ஏந்தி அமேசான் காடுகளை காக்க வலியுறுத்தின.


Thalattumazhai , tirupur

Thalattummazhai ,

Thalattummazhai , Pasumai karur

Thalattummazhai , Pasumai edwin

அவற்றுள் சில, பனை காக்கும் நண்பர்கள் திருப்பூர் , கிராமிய மக்கள் இயக்கம் , பசுமை கரூர் , திரு பசுமை எட்வின் நீடாமங்கலம்

ஒரு காடு அழிந்தால் அதைச் சார்ந்திருக்கும் நாடும் அழியும் ஆனால், அமேசான் காடு அழிந்தால் அது உலக அழிவையே துரிதப்படுத்திவிடும்.. ஏனென்றால் , அது வெறும் மழைக்காடு மட்டுமல்ல.. அதுதான் உலகின் நுரையீரல்

Thalattummazhai

நம் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில் அதற்கு காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் அமேசான் காடுகளை பாதுகாக்க வேண்டும்.

thalattumazhai ,

காடுகளை பாதுகாப்போம்! மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்!

நன்றி 🙏

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5 மரக்கன்றுகள் நட்டால், ஒரே நாளில் பட்டா! - அசத்தும் கரூர் மண்டல துணை வட்டாட்சியர்

கரூரில் மண்டல துணை வட்டாட்சியர் ஒருவர், தனது இருக்கைக்குப் பின்னே, 'என் கையொப்பம் விலைமதிக்க முடியாதது விலை பேசாதீர் '  என்று எழுதி வைத்துள்ளது, பலரது பாராட்டைப் பெற்றிருக்கிறது. `எந்தச் சூழலிலும் லஞ்சத்தை விரும்பமாட்டேன்' என்று நேர்மை மாறாமல் பணியாற்றும் அரசு அலுவலர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி ஓர் அரசு அலுவலர்தான், மோகன்ராஜ். கரூர் மண்டல துணை தாசில்தாராக இருக்கும் இவர், தனது அறை முழுக்க, `என் கையொப்பம் விலைமதிக்க முடியாதது. விலை பேசாதீர். கையூட்டு கொடுப்பதும், கொள்வதும் குற்றமாகும். மண்டல துணை வட்டாட்சியர், கரூர்' என்று எழுதிவைத்து அசத்துகிறார். அதோடு, `பட்டா மாறுதல் கோரும் புல எண்ணில் புதிதாக '5' மரக்கன்றுகள் நட்டு அதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தால், விண்ணப்பம் முதுநிலை வரிசையின்படி அல்லாமல் முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக பரிசீலனை செய்யப்படும்' என்றும் எழுதி வைத்து அசரடிக்கிறார். நான் பணிஓய்வு அடையும்வரை மரக்கன்று வளர்க்க நான் செய்யும் முயற்சியையும், நான் செய்யும் பணியில் கட்டிக்காக்கும் நேர்மையையும் விடாமல் தொடருவேன். இதேபோல்...

வித்தியாசமான வீடு

வீட்டிற்கு அருகில் மரம் நட்டால் வீட்டுக்குள் வேர் வரும் , இலை விழும் என்பவர்களுக்கு 👇👇👇❤❤❤ #Savetree

பேளுக்குறிச்சி இராவணன் குழுவினரின் சிலம்பாட்டம்

தமிழர்களின் சிறந்த தற்காப்பு கலையும் வீர விளையாட்டுமான சிலம்பாட்டமானது நாமக்கல் பேளுக்குறிச்சியை சேர்ந்த இராவணன் சிலம்ப குழுவினரால் புதியதலைமுறை தொலைக்காட்சி நம்மால் முடியும் குழுவினரின் ஒருங்கிணைப்பில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு பசுமை சார்ந்து இயங்கும் குழுக்கள் பங்கேற்ற பொள்ளாச்சி பசுமை பொங்கல் விழாவில் நடைபெற்றது. நன்றி : புதியதலைமுறை தொலைக்காட்சி - நம்மால் முடியும் குழு , டார்கெட் ஜீரோ