முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சென்னை உள்ளிட்ட 21 நகரங்களில் நிலத்தடி நீர் மட்டம் முற்றிலும் காணாமல் போகும் அபாயம்


மற்ற நகரங்களைவிட சென்னையில் சிறந்த நீர் ஆதாரங்கள் மற்றும் மழைப்பொழிவு இருந்தபோதிலும் 3 ஆறுகள் , 4 நீர் நிலைகள் , 5 ஈர நிலங்கள் , 6 வனப்பகுதிகள் ஆகியவை தண்ணீர் இல்லாமல் வறண்டுள்ளது என நிதி ஆயோக் அறிக்கை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தால் அதிக செலவு பிடிக்கும் என்பதால் மழைநீரை
சேமிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

2030 ஆம் ஆண்டில் 40% மக்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளது.

#Savewater #Savetree

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

20 வருடங்களுக்கு பிறகு நிரம்பிய கரூர் ஆத்துப்பாளையம் அணையில் சாயப்பட்டறை கழிவுநீர் | துர்நாற்றம் வீசும் அவலம்

    உலகில் கிடைக்கும் மிகவும் சுவையான குடிநீரில் ஒன்று தான் சிறுவாணி நீர் , அப்படிப்பட்ட சுவையான நீர் கரூர் மாவட்டம் வரைக்கும் வந்தாலும் நாம் அந்த சுவையை சுவைக்க முடியாது. காரணம் என்ன ? பார்ப்போம்   மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுவாணி மலைப்பகுதியில் பல்வேறு சிறு ஓடைகள் இணைந்து ஆறாக பெருக்கெடுத்து ஓடி வருகிறது , இந்த ஆற்றின் பெயர் பெரியாறு என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த ஆற்றுடன் வெள்ளியங்கிரி மலையில் இருந்து உருவாகும் மத்திமர கண்டி ஓடையும் பின்பு சின்னாறு , தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி என்ற ஆறும் ஒன்று சேர்ந்தவுடன் இவை நொய்யல் என பெயர் பெருகிறது.   பின்பு கோவை , திருப்பூர் , காங்கேயம் வழியாக கரூர் மாவட்டம் நொய்யல் என்ற கிராமத்தில் காவிரியுடன் கலக்கிறது.   ஒரு காலத்தில் கொங்கு மண்டலத்தின் அடையாளமாகவும் , விவசாயம் வளமாக அமைய காரணமாகவும் இருந்த நொய்யல் ஆறு தற்போது விவசாய நிலங்களை பாழ்படுத்தியும் , நிலத்தடி நீர்மட்டத்தை கெடுத்தும் வருகிறது அதற்கு முக்கிய காரணம் திருப்பூர் பகுதியில் இருந்து நேரடியாக ஆற்றில் கலக்கும் சாயப்பட்டறை கழிவுகள்.   இந்த ந...

தேனி மாவட்டத்தில் நடந்து வரும் ஆணி பிடுங்கும் திருவிழா

15 கும் மேற்பட்ட கிராமத்தில் கடந்த கிராம சபை கூட்டத்தின் போது மரத்தில் ஆணி அடிக்க கூடாது என தீர்மானம் போடப்பட்ட நிலையில் ஏற்கனவே அடித்த ஆணிகளை தற்போது பிடுங்கி வருகின்றனர். ஆணி பிடுங்கும் திருவிழா என்ற பெயரில் கடந்த ஒரு மாத காலமாக சாலையின் ஓரத்தில் உள்ள மரங்களில் அடிக்கப்பட்டுள்ள ஆணிகளை பிடுங்கி வருகின்றனர்.

பேளுக்குறிச்சி இராவணன் குழுவினரின் சிலம்பாட்டம்

தமிழர்களின் சிறந்த தற்காப்பு கலையும் வீர விளையாட்டுமான சிலம்பாட்டமானது நாமக்கல் பேளுக்குறிச்சியை சேர்ந்த இராவணன் சிலம்ப குழுவினரால் புதியதலைமுறை தொலைக்காட்சி நம்மால் முடியும் குழுவினரின் ஒருங்கிணைப்பில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு பசுமை சார்ந்து இயங்கும் குழுக்கள் பங்கேற்ற பொள்ளாச்சி பசுமை பொங்கல் விழாவில் நடைபெற்றது. நன்றி : புதியதலைமுறை தொலைக்காட்சி - நம்மால் முடியும் குழு , டார்கெட் ஜீரோ