முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பசுமை கரூர் குழுவினருடன் மரக்கன்று வைத்து தமது திருமண நாளை கொண்டாடிய தம்பதியர்

பசுமை கரூர் 13 வது வார களப்பணி எப்பொழுதும் போல தேநீருடன் தொடங்கியது நண்பர்கள் இலையதலைமுறை மாயப்பெருமாள் , பாலசுந்தர் , சேதுராமன் , பூபாலன் , ஜெய்குமார் , அருள்குமார் , மணிராஜ் , சதிஸ் , கார்த்தி , ஜெகன் , ராஜலிங்கம் ஐயா ஆகியோர் கலந்துகொண்டனர்

Karur , Pasumai karur , மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்

முன்பு நட்ட மரப் பிள்ளைகளில் மாண்டு போனவை இன்று மாற்றி வைக்கப்பட்டன

மேலும் சில இடங்களில் கூண்டுகள் சேதம் அடைந்து இருந்தது அதை சரி செய்தோம் அதனை தொடர்ந்து
இன்று 5 மரப் பிள்ளைகள் நட்டு களப்பணியை நிறைவு செய்தோம்
Karur , Pasumai karur , மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் , மரம் , மரங்கள்

தோழர் தேவராஜன் - காந்திமதி தம்பதியரின் திருமண நாளான இன்று அவர்கள் கையால் புங்கன் மரப் பிள்ளை ஒன்றை அவர் வீட்டின் வாசலில் நட்டு மகிழ்ந்தோம்
Karur , wedding , anniversary , tree , pasumai , celebration

இன்று
புங்கன் - 3
பாதாம் - 1
மகிழம் - 1
என 5 புதிய மரப் பிள்ளைகள் உடன் முன்பு நட்டு பட்டு போன மரப்பிள்ளைகளுக்கு பதிலாக
2 மகிழம்,1 செண்பக மரப்பிள்ளை நட்டு களப்பணி நிறைவு செய்தோம்.

நண்பர்கள் 11 பேர் நிறைவாக கலந்து கொண்டனர்
அடுத்த வாரம் குறைந்தது 20 மரப் பிள்ளைகளை பூமித்தாயின் மடியில் விதைத்து விட வேண்டும்
நன்றிகள் கோடி நண்பர்களே

தங்கள் வீட்டில் மரம் நட்டு வளர்க்க விருப்பமா?
தகுந்த இட வசதி உள்ளதா?
நீர் ஊற்றி பராமரிக்க இயலுமா ?
இன்னும் ஏன் தாமதம் அழைக்கவும்
இளையதலைமுறை கரூர்அமைப்பை

என்றும் பசுமை பணியில் நாம்
தொடர்புக்கு
9787038877
9444738877

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5 மரக்கன்றுகள் நட்டால், ஒரே நாளில் பட்டா! - அசத்தும் கரூர் மண்டல துணை வட்டாட்சியர்

கரூரில் மண்டல துணை வட்டாட்சியர் ஒருவர், தனது இருக்கைக்குப் பின்னே, 'என் கையொப்பம் விலைமதிக்க முடியாதது விலை பேசாதீர் '  என்று எழுதி வைத்துள்ளது, பலரது பாராட்டைப் பெற்றிருக்கிறது. `எந்தச் சூழலிலும் லஞ்சத்தை விரும்பமாட்டேன்' என்று நேர்மை மாறாமல் பணியாற்றும் அரசு அலுவலர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி ஓர் அரசு அலுவலர்தான், மோகன்ராஜ். கரூர் மண்டல துணை தாசில்தாராக இருக்கும் இவர், தனது அறை முழுக்க, `என் கையொப்பம் விலைமதிக்க முடியாதது. விலை பேசாதீர். கையூட்டு கொடுப்பதும், கொள்வதும் குற்றமாகும். மண்டல துணை வட்டாட்சியர், கரூர்' என்று எழுதிவைத்து அசத்துகிறார். அதோடு, `பட்டா மாறுதல் கோரும் புல எண்ணில் புதிதாக '5' மரக்கன்றுகள் நட்டு அதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தால், விண்ணப்பம் முதுநிலை வரிசையின்படி அல்லாமல் முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக பரிசீலனை செய்யப்படும்' என்றும் எழுதி வைத்து அசரடிக்கிறார். நான் பணிஓய்வு அடையும்வரை மரக்கன்று வளர்க்க நான் செய்யும் முயற்சியையும், நான் செய்யும் பணியில் கட்டிக்காக்கும் நேர்மையையும் விடாமல் தொடருவேன். இதேபோல்...

வித்தியாசமான வீடு

வீட்டிற்கு அருகில் மரம் நட்டால் வீட்டுக்குள் வேர் வரும் , இலை விழும் என்பவர்களுக்கு 👇👇👇❤❤❤ #Savetree

பேளுக்குறிச்சி இராவணன் குழுவினரின் சிலம்பாட்டம்

தமிழர்களின் சிறந்த தற்காப்பு கலையும் வீர விளையாட்டுமான சிலம்பாட்டமானது நாமக்கல் பேளுக்குறிச்சியை சேர்ந்த இராவணன் சிலம்ப குழுவினரால் புதியதலைமுறை தொலைக்காட்சி நம்மால் முடியும் குழுவினரின் ஒருங்கிணைப்பில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு பசுமை சார்ந்து இயங்கும் குழுக்கள் பங்கேற்ற பொள்ளாச்சி பசுமை பொங்கல் விழாவில் நடைபெற்றது. நன்றி : புதியதலைமுறை தொலைக்காட்சி - நம்மால் முடியும் குழு , டார்கெட் ஜீரோ